குடிபோதையில் உளறிய ரவிசாஸ்திரி: உலக கோப்பை அணியில் தமிழக வீரர் தேர்வு குறித்து தொடர்ந்து சர்ச்சை

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வான நிலையில் அது குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பிடித்திருந்தார்.

4வது வீரருக்கான இடத்தில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வானார்.

இதற்கு சமீபகாலமாக அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம் காரணமாக தெரிவிக்கப்பட்ட போதும், சர்வதேச அளவில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத வீரரான விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டது கடும் விமர்சனத்தை எழுப்பியது.

இந்நிலையில் தமிழக் வீரர் விஜய் சங்கரின் விக்கிபீடியா பக்கத்தில், இந்திய ரசிகர் ஒருவர் இந்திய அணியின் 4வது இடத்துக்கு அம்பதி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குடிபோதையில் தெரிவித்ததாக பதிவிட்டார். ஆனால் 6 நிமிடத்தில் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்