இதுதான் நடராஜர் சிக்ஸ்! வைரலாகும் தினேஷ் கார்த்திக் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் நடராஜர் சிக்ஸ் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் அவர் அடித்த ஒரு சிக்சர் தான் வைரலாக பரவி வருகிறது.

டோனியின் ஹெலிகாப்டர் சிக்சர் மிகவும் பிரபலமாகும். அதேபோல் தினேஷ் கார்த்திக் நேற்று அடித்த சிக்சர் நடராஜர் சிக்சர் என்று அழைக்கப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த சிக்சர் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்