சிக்ஸரா அடிச்ச! மைதானத்தில் அஸ்வினை கிண்டல் செய்த கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

டிவில்லியர்ஸ்ஸின் அதிரடியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணிக்கு இந்த ஹாட்ரிக் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும், வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என கோஹ்லி கூறியுள்ளார். இதற்கிடையில், நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் அஸ்வினின் ஆட்டத்தை கேலி செய்யும் வகையிலான உடல்மொழியை கோஹ்லி வெளிப்படுத்தினார்.

கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் களத்திற்கு வந்தார். முதல் பந்தில் சிக்ஸ்ர் அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்ஸ்ருக்கு அஸ்வின் தூக்கி அடித்தபோது அந்த பந்தை பாய்ந்து சென்று கோஹ்லி கேட்ச் பிடித்து அஸ்வினை ஆட்டமிழக்க செய்தார்.

பந்தை பிடித்தவுடன்...சிக்ஸர் அடிச்சியா என கேட்பது போல அஸ்வினை பார்த்து சைகை செய்தார். அந்த நேரத்தில் கோஹ்லியின் உடல்மொழி சற்று அநாகரீமாக இருந்தது. எப்போதும் மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கோஹ்லி, இவ்வாறு நடந்துகொள்வது முதல்முறையல்ல, அவர் பலமுறை இவ்வாறு எதிரணி வீரர்களை கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...