அதிரடி காட்டிய வாட்சன்... 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைஸ் ஐதராபாத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 41வது லீக் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே, 49 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார். டேவிட் வார்னர் 45 பந்துகளில் 57 ரன்கள் குவித்திருந்தார்.

சென்னை அணியில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் டூபிளசிஸ் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான சேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

அதேசமயம் சுரேஷ் ரெய்னாவும் பொறுப்பாக விளையாடி 38 ரன்களை சேர்த்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்