6 விக்கெட் வீழ்த்திய அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக மும்பை அணியில் களமிறங்கும் வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரிக்ஸை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்னே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், காயம் காரணமாக ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் வெளியேறினார்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் அறிமுக போட்டியிலேயே 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

BCCI/IPL

அதன் பிறகு, இரண்டு போட்டிகளில் விளையாடிய அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரும் தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பியரன் ஹென்ரிக்ஸ் மாற்று வீரராக மும்பை அணியில் களமிறங்க உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே பெர்னாண்டோ, மலிங்கா ஆகிய வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்