20 சிக்சர்கள்.. 25 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய வீரர்! யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் முன்சி 25 பந்துகளில், 20 சிக்சர்களுடன் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் கவுண்டி டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குளூசெஸ்டைர் அணியில் ஜார்ஜ் முன்சி விளையாடினார். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், இங்கிலாந்து கவுண்டி அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி, ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய அவர், 25 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். பவுண்டரிகளை விட சிக்சர்களை அதிகமாக விளாசிய முன்சி, 39 பந்துகளில் 147 ஓட்டங்கள் அடித்து நொறுக்கினார்.

இதில் 20 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் விளையாடிய மற்றொரு வீரரான வில்லோஸ் 53 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்தது.

டி20 கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற தொடர் என்பதால், முன்சியின் இந்த சாதனை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்