ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்! பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு பேட்டி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள ஒவ்வொரு போட்டியையுமே, இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடனும் ஆட வேண்டும் என்ற வடிவத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் இதுவரை இந்திய அணியை வீழ்த்தியதேயில்லை. சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி 5-0 என ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது கூறுகையில்,‘எங்களைப் பொறுத்தவரை 9 போட்டிகளும் மிக முக்கியமானவை. ஆகவே, எல்லா போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போன்றே ஆடுவோம். சமீபத்தில் பெரிய தொடரில் இந்தியாவை வீழ்த்தியுள்ளோம்.

ஆகவே எங்களுக்கு அந்த சாதக நிலை உள்ளது. எங்கள் அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று பேசப்பட்டு, நாங்கள் உலகக்கோப்பைக்கு சென்றால் அது எங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.

ஆனால், பலவீனமான அணி என்ற நிலையில் சென்றால் அப்போதுதான் மற்ற அணிகள் அபாயத்தை உணர்வார்கள். ஆகவே பலவீனமான அணி என்ற அடையாளம் அணி மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்