பேசாம இவருக்கு ஓய்வு கொடுங்க..! ரெய்னாவின் பேட்டிங் குறித்து சென்னை ரசிகர்கள் அதிருப்தி

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் மோசமாக இருப்பதாக, அந்த அணியின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா முதல் பந்திலேயே ஸ்டெயின் பந்துவீச்சில் போல்டாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

2019 ஐ.பி.எல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் சராசரி 23 ஆக உள்ளது. இதுவரை அவர் ஆடிய ஐ.பி.எல் தொடர்களிலேயே இந்த தொடர் தான் மோசமானதாக அமைந்துள்ளது.

ஒரு அரைசதம் மட்டும் இந்த தொடரில் அடித்துள்ள ரெய்னா, எஞ்சிய 4 லீக் போட்டிகளில் ஓட்டங்கள் குவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சென்னை அணி ரசிகர்கள் ரெய்னாவின் ஆட்டத்தினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு சில ரசிகர்கள் ரெய்னாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வேறு வீரரை அணியில் சேர்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்