40 வயதில் 4 விக்கெட் எடுத்து அசத்தல்! டோனியின் அறிவுரைப்படி தான் பந்துவீசினேன்: இம்ரான் தாஹிர்

Report Print Kabilan in கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்திய அசத்திய சென்னை அணி வீரர், அணித்தலைவர் டோனியின் அறிவுரையே தனது அபார பந்துவீச்சுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணித்தரப்பில் இம்ரான் தாஹிர் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இது சென்னை அணி பெற்ற 7வது வெற்றியாகும். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற இம்ரான் தாஹிர் கூறுகையில், ‘கேப்டன் டோனியின் அறிவுரைப்படி தான் நான் பந்து வீசினேன்.

அவரது ஆலோசனை எப்போதுமே பலனை அளிக்கும். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பாராட்டு எல்லாம் அவரைத் தான் சாரும்.

எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்குவார். கேப்டனின் அறிவுரையை நான் அப்படியே பின் பற்றினேன். நான் பணியை நேசித்து செய்கிறேன். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை உருவாக்கி வருகிறோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒருவர் மீது மற்றவர் மதிப்பதே காரணம். எனது விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்களை கேப்டன் அனுமதிக்கிறார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர், 40 வயதிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் நேற்றைய போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers