கோபத்தில் மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களிடம் டோனி என்ன பேசினார் தெரியுமா? அவரே கொடுத்த விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான அணிக்கெதிரான போட்டியின் போது நடுவர்களிடம் டோனி என்ன பேசினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நடுவரின் குழப்பத்தினால், கடைசி ஓவரில் டோனி மைதானத்தின் உள்ளே சென்றதால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டோனி மைதானத்தின் உள்ளே சென்றது ஏன் என்பது குறித்தும், அவர் நடுவர்களிடம் என்ன பேசினார் என்பது குறித்தும் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் டோனி, நாம் போட்டியில் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும், போட்டியில் ஒரு சில ஷாட்டுகள் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடும்.

அந்த வகையில் இது ஒரு மிகப் பெரிய மைதானம், அவுட் பீல்டில் பந்து வேகமாக சென்றாது. கடைசி கட்டத்தில் வீரர்கள் சிறப்பாக விளையாடினர் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் மைதானத்தில் உள்ளே மீண்டும் உள்ளே நுழைந்ததைப் பற்றி கூறுகையில், தனி ஒருவர் செய்யும் தவறினால் அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்