கடைசி ஓவரில் டோனியின் மிடில் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஸ்டோக்ஸ்! ஒட்டு மொத்த மைதானமே அமைதியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது டோனி கடைசி ஓவரில் அவுட்டான வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் இந்தளவிற்கு பரபரப்பாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஏனெனில் கடைசி ஓவரில் நோல் பால் சர்ச்சை, கோபத்தில் மைதானத்தின் உள்ளே வந்து நடுவர்களிடம் டோனி வாக்குவாதம் செய்தது போன்றவை நேற்றைய போட்டியில் காணப்பட்டது.

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவை என்ற போது டோனி, எதிர்பாரதவிதமாக ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் போல்டாகினார். எப்போதும் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்கும் டோனி, இப்போட்டியையும் கடைசி வரை கொண்டு சென்றதால், மீண்டும் ஒரு பினிஷர் டோனியை பார்க்கபோகிறோம் என்ற உற்சாகத்தில் அங்கிருந்த ரசிகர்கள் டோனி..டோனி என்று ஆர்பரித்தனர்.

ஆனால் டோனியின் விக்கெட் வீழுந்தவுடன் ஒட்டு மொத்த மைதனாமே சில நொடிகள் அமைதியாக இருந்தது. ராஜஸ்தானில் விளையாடினாலும், நேற்று டோனிக்கு ஆதரவு குவிந்ததையும் பார்க்க முடிந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்