சிஎஸ்கே போட்டியை காண இலங்கையிலிருந்து சென்னை வந்த தமிழ் ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சென்னை வந்தது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில் இதை காண இலங்கையில் இருந்து இரண்டு தமிழ் இளைஞர்கள் வந்திருந்திருந்தனர்.

அவர்கள் பேசுகையில், இலங்கையில் இருந்து இந்த போட்டியை காண சென்னை வந்தோம்.

போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்கள் முதலில் கிடைக்கவில்லை, பின்னர் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்தோம்.

டோனியின் ஆட்டத்தை காணவந்தோம், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்