பெங்களூர் தொடர் தோல்வி: ஷ்ரேயாஸின் அனல் பறக்கும் ஆட்டத்தால் வெற்றி பெற்ற டெல்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் பார்தீவ் பட்டேல், விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடன் விளையாடத் தொடங்கினர்.

டெல்லி அணி தங்களின் அதிவேக பந்து வீச்சையும், சுழல் பந்து வீச்சையும் ஒரு சேர தாக்க தொடங்கினர்.

இதில் டெல்லி அணியின் பந்து வீச்சை சிறிது நேரம் தாக்கு பிடித்து விராட் கோஹ்லி 41 ரன்களையும், அலி 32 ரன்களை எடுத்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.

ஆனால் மற்ற வீரர்கள் டெல்லி அணியின் பந்து வீச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.பின்பு களமிறங்க உள்ள டெல்லி அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கினர்.

இதில் டெல்லி அணியில் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும், ரபடா 4 விக்கெட்டுகளையும், படேல் மற்றும் சன்தீப் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

டெல்லி அணியின் அதிரடி தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா, தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ஆனால் அடுத்து வந்து ஷ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஐபிஎல் தொடரில் தன்னுடைய 11 அரை சதத்தை பதிவுசெய்து 67 ரன்னில் வெளியேறினார்.

பின்பு களமிறங்கிய கோலின், பன்ட் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி சற்று அணிக்கு தேவையான ரன்களை சேர்ந்து அவர்களும் வெளியேறினர்.

இவரைத்தொடர்ந்து அடுத்து வந்த படேல் தன்னுடைய முதலே பந்திலேயே நான்கு ரன்களை அடித்து அணியை வெற்றி அடைய செய்தார்.

இதன் மூலம் டெல்லி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு ஏழு பந்துகள் மீதமிருக்க வெற்றியை தன்வசமாக்கினர்.

பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி மட்டும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார், மற்ற வீரர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் சஹாஸ் மட்டும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்