கடைசி கட்டத்தில் சொதப்பிய தீபக் சாஹர்..கடும் கோபத்தில் திட்டிய டோனி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டோனி கோபப்பட்டு பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதின, பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் இந்த போட்டியில் எப்போதும் கூலாக காணப்படும் டோனி, சற்று கோபப்பட்டார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 39 ஓட்டங்கள் தேவை என்ற போது, சென்னை அணி சார்பில் 19-வது ஓவரை வீசிய தீபக் சாஹர், முதல் இரண்டு பந்துகளை தொடர்ச்சியாக நோ பாலாக வீசினார்.

அதில் முதல் பந்தில் பவுண்டரியும் இரண்டாவது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டன. இரண்டாவது நோ பாலை வீசியதும் கடும் கோபமடைந்த டோனி, தீபக் சாஹரை திட்டியதோடு ஆலோசனையும் வழங்கினார். இ

இக்கட்டான நேரத்தில் பொறுமை காப்பவர் டோனி, ஆனால் அவரை சஹார் கோபப்படுத்திவிட்டார் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்