பெங்களூரு அணியை அலற விட்ட யுவராஜ் சிங்...ஒரே ஓவரில் 3 சிக்ஸர் அடித்து மிரட்டிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணி வீரர் யுவராஜ் சிங் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்ததைக் கண்டு சுழற்பந்து வீச்சாளர் சஹால் எனக்கும் ஸ்டுவர் பிராட்டின் நிலை தானோ என்று மனதில் எண்ணியதாக கூறியுள்ளார்.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு-மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில், மும்பை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 13.1 ஓவரின் முதல் பந்தை சுழற் பந்து வீச்சாளர் சஹால் வீசிய போது அதை எதிர் கொண்ட யுவராஜ் சிங் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். அதன் பின் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் என் ஹாட்ரிக் அடித்து அசத்தினார்.

இதனால் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்த பழைய யுவராஜ்சிங்கை நாம் பார்க்க முடிந்தது. இந்த போட்டியிலும் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, அந்த பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட நினைத்த யுவராஜ் சிங் கேட்ச் ஆகி அவுட்டானார்.

யுவராஜின் இந்த ருத்ரதாண்டவத்தை பார்த்து பெங்களூரு அணி வீரர்கள் அரண்டு நின்ற நிலையில் அவர் அவுட்டான பின்னரே நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இது குறித்து சஹால் கூறுகையில், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், யுவராஜ் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்ததும், எனக்கும் ஸ்டூவர்ட் பிராடின் நிலைதானோ என்று நினைத்தேன்.

ஆனால் அடுத்த பந்தை கண்டிப்பாக சிறப்பாக வீச வேண்டும் என்ற உறுதியுடன் வீசினே என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் 2007-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்