மும்பை போட்டியில் சர்ச்சை.. உச்சகட்ட கோபத்தில் கோஹ்லி! கண்ணை திறந்து பாருங்க என ஆதங்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில் நோ பாலை சரியாக கவனிக்காத நடுவர்களை பற்றி கோஹ்லி கோபமாக பேசியுள்ளார்.

பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மலிங்கா நோ பால் வீசியுள்ளார். ஆனால் நடுவர்கள் அதை கவனிக்காமல் இருந்ததால், வெற்றி மும்பை அணி பக்கம் சென்றுவிட்டது.

இதுவே அது நோ பாலாக அறிவித்திருந்தால், பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கும்.

இது குறித்து பெங்களூரு அணியின் தலைவர் கோஹ்லி கூறுகையில், நாங்கள் ஒன்றும் கிளப் அணியில் விளையாடவில்லை. உயர்தரமான ஐபிஎல் போட்டியை சர்வதேச அளவில் விளையாடுகிறோம்.

இதனால் நடுவர்கள் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். மல்லிங்கா வீசியது எவ்வளவு பெரிய நோ-பால் தெரியுமா. இதை கவனிக்காமல் இருந்தது கேலிக்குரியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே வெற்றிக் கேப்டன் ரோகித் கூறுகையில், நேர்மையாகக் கூறுகிறேன், நான் மைதானத்தை விட்டு செல்லும்போதுதான் அது நோ-பால் என்பதே எனக்கு தெரியும்.

இது போன்ற தவறுகள் விளையாட்டிற்கு ஆரோக்கியமானதில்லை. மல்லிங்கா வீசிய ஓவருக்கு முதலில் பும்ரா பந்துவீசினார். அப்போது, அந்த பந்து வைட் இல்லாமல் சென்றபோதிலும் அதை வைட் என்று அறிவித்தார்கள்.

இதுபோன்ற முடிவுகள் விளையாட்டை குலைத்துவிடும், இதுபோன்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியையே சிதைத்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்