ரிஷாப் பண்ட் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்: தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இளம் வீரரான ரிஷாப் பண்ட் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

2019 ஐ.பி.எல் தொடரின் 12வது சீசன் கடந்த 23ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரிஷாப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். எனவே இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக ரிஷாப் பண்ட் திகழ்வார் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், ஒரே அணியில் இணைந்து வரும் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும், இடதுகை துடுப்பாட்ட வீரரான குயிண்டான் டி காக் தற்போது ரிஷாப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நான் ரிஷாப் பண்ட் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் மிகவும் குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்துள்ளதை பார்க்கிறேன்.

அவரது ஷாட்டில் அதிக அளவு Power உள்ளது. அவர் மிகவும் வலுவான வீரர். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.

IANS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...