இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா விராட் கோஹ்லி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், விராட் கோஹ்லி 46 ஓட்டங்கள் எடுத்தால் சாதனை ஒன்றை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் கோஹ்லி 46 ஓட்டங்கள் எடுத்தால் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனைப் படைப்பார். முன்னதாக சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல்-யில் 5 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

எனவே, கோஹ்லியும் இன்றைய போட்டியில் 5,000 ஓட்டங்கள் என்ற சாதனையை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை 164 போட்டிகளில் 156 இன்னிங்சில் விளையாடியுள்ள கோஹ்லி 4954 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
  • சுரேஷ் ரெய்னா - 5034 ஓட்டங்கள்
  • விராட் கோஹ்லி - 4954 ஓட்டங்கள்
  • ரோஹித் ஷர்மா - 4507 ஓட்டங்கள்
  • ராபின் உத்தப்பா - 4231 ஓட்டங்கள்
  • கவுதம் காம்பீர் - 4217 ஓட்டங்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்