எங்கள் அணியினர் ஒன்றும் 60 வயதானவர்கள் கிடையாது: சென்னை அணி வீரர் காட்டம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை வயதானவர்கள் என்று விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அணியின் வீரர் பிராவோ கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வயதானவர்கள் என்ற விமர்சனம் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய அந்த அணியின் 35 வயதான வெய்ன் பிராவோ, கடந்தாண்டு சாம்பியன் பட்டத்தை வென்று வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து காட்டினோம்.

எங்களை பொறுத்தவரை வயது வெறும் நம்பர் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி மக்கள் பேசும் போதெல்லாமல் வயது விவகாரத்தையும் இழுத்து விடுகிறார்கள்.

நாங்கள் ஒன்றும் 60 வயது நிரம்பிய அணி அல்ல. அணியில் 35, 32, 30 வயதுடைய வீரர்கள் தான் இருக்கிறார்கள்.

எங்கள் அணியினர் இன்னும் இளமையுடன் தான் இருக்கிறோம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்து, அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்