மீண்டும் கோபப்பட்ட அஸ்வின்: தோல்வியில் முடிந்த பஞ்சாப்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
415Shares

ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பஞ்சாப் அணியின் தோல்விக்கு அவர்களின் மோசமான பந்துவீச்சும் ஒரு காரணம்.

பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முஜீப் உர் ரஹ்மான் மற்றும் அங்கித்துக்கு பதிலாக இந்த போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வேகப் பந்துவீச்சாளர் வில்ஜோன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

வருண் சக்கரவர்த்தி தன் முதல் ஓவரில் 25 ரன்கள் கொடுத்து ஷாக் கொடுத்தார். எனினும், முடிவில் 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்திருந்தார். மற்ற வீரர்களில் ஷமி 44, அஸ்வின் 47, டை 37, வில்ஜோன் 36 ரன்கள் கொடுத்தனர்.

முதல் ஆட்டத்தில் மன்கட் முறை சர்ச்சையோடு வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்திலும் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கோபப்பட்டுள்ளார். 3 ரன்னில் இருக்கும் போது பஞ்சாப் அணி வீரர் முகமது ஷமி வீசிய பந்தில் ரசல் போல்ட் ஆனார். ஆனால் நடுவர் அதை நோ பால் என அறிவித்தார்.

அதற்கு காரணம் விதிகளின் படி 3 பீல்டர்கள் இருக்கவேண்டிய இடத்தில் கூடுதலாக 4 வீரர்கள் இருந்ததால், அப்போது வீசப்பட்ட பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த சமயம் அஸ்வின் சற்று கோபம்மடைந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்