அஸ்வின் யாரையும் ஏமாற்றவில்லை.... பேட்ஸ்மேன் ஒரு ரன் திருடன்: கபில்தேவ் ஆதரவு

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்க செய்தது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ஆட்டமிழக்க செய்தார் அஸ்வின்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஆதரவு அளித்துள்ள பேசியுள்ள கபில்தேவ்,

பட்லரை மன்கட் அவுட் செய்த அஸ்வின் செயல் சரியானதுதான். ஒருபேட்ஸ்மேன், ரன்னைத் திருடுவதற்கு முயற்சிக்கும் போது, பந்துவீச்சாளரை ஏன் குறை கூறுகிறீர்கள்.

ஐபிஎல் போட்டி என்பது முழுமையாக போட்டியையும்,பணத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அஸ்வின் செய்ததன் மூலம் எதிரணி விதியில் சிக்கிவிட்டது என்பதை உறுதி செய்துவிட்டது.

ஸ்பிரிட் ஆப் தி கேம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும். ஸ்பிரிட் ஆப் தி கேமை கடைபிடிப்பதில் பந்துவீச்சாளருக்கு மட்டும் அதிகமான பொறுப்பு ஏன் தேவை, அவர்கள் விதியை மீறிக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள். பேட்ஸ்மேனுக்கும் அந்த விதிகள்தேவைதான்.

அஸ்வின் யாரையும் ஏமாற்றவில்லை. பேட்ஸ்மேன் ரன்னை திருடும்போது தடுத்துள்ளார். என்னைப் பொருத்தவரை பேட்ஸ்மேன் ஒரு ரன் திருடன் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்