முன்பே இலங்கை வீரருக்கு சர்ச்சை முறையில் அவுட் கேட்ட அஸ்வின்! ஆச்சரிய முடிவு எடுத்த சச்சின்-சேவாக் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இலங்கை வீரருக்கு ‘மன்கட்’ முறையில் அவுட் கேட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டி ஒன்றில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெரும்பாலும் அஸ்வினுக்கு கண்டனங்கள் தெரிவித்தே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அஸ்வின் இதற்கு முன்பே இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘மன்கட்’ முறையில் அவுட் கோரிய வீடியோவை கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கப்பாவில் நடந்த ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்கள் மேத்யூஸ் மற்றும் திரிமன்னே இருவரும் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது மேத்யூஸுக்கு பந்து வீசிய அஸ்வின், எதிர்முனையில் இருந்த திரிமன்னே கிரீசை விட்டு வெளியே சென்றதைப் பார்த்து மன்கட் முறையில் அவுட் கேட்டார். உடனே நடுவர்கள் இருவரும் ஆலோசித்தனர்.

பின்னர் சேவாக், சச்சின் டெண்டுல்கர் இருவரும் நடுவர்களிடம் பேசினர். அதனைத் தொடர்ந்து, திரிமன்னேவுக்கு அவுட் கொடுக்காமல் விளையாட அனுமதிக்கப்பட்டது. மேலும், சேவாக் மற்றும் சச்சின் எடுத்த முடிவு பாராட்டப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்