டோனி மிகச் சிறந்த தந்திரசாலி! புகழ்ந்து தள்ளிய டி வில்லியர்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட்டில் டோனி சிறந்த தந்திரசாலி என பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

2019 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 70 ஓட்டங்களில் சுருண்டது. நட்சத்திர வீரர்களான கோஹ்லி(6), டி வில்லியர்ஸ்(9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், பெங்களூரு அணி வீரர் டி வில்லியர்ஸ் சென்னை அணித்தலைவர் டோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘கிரிக்கெட்டில் டோனி மிகச் சிறந்த தந்திரசாலி. சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிரான எங்களது முதல் ஆட்டத்தில், டோனி பந்துவீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஆடுகளத்தில் பந்து நன்கு திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர்களை வீச வைத்தார். அந்த அணி மிகுந்த அனுபவம் வாய்ந்ததாக உள்ளது. அணியில் 9 வீரர்கள் 30 வயதுக்கு மேல் உள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

IANS
PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்