பீல்டிங் சிறந்து விளங்கவில்லை.. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரி செய்கிறோம்: வெளிப்படையாக கூறிய டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல்-யில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்த 148 ஓட்டங்களை வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் பந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக திரும்பியது. மேலும் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் பனித்துளி போதுமான அளவுக்கு இருந்தது.

பந்து வீச்சாளர்கள் பணி பாராட்டுக்குரியது. டெல்லியை 147 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பே.

BCCI

பீல்டிங்கில் நாங்கள் ஒரு போதும் சிறந்து விளங்கவில்லை. ஆனால், மோசமாக இல்லாமல் பாதுகாப்பான பீல்டிங் இருக்கிறது. சில ஓட்டங்களை இழந்தாலும், நாங்கள் அனுபவத்தின் மூலம் அதை சரி செய்கிறோம். பீல்டிங்கில் இருக்கும் குறையை நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் நிவர்த்தி செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers