அனல் பறந்த சென்னை-டெல்லி போட்டி...இஷாந்த்சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாட்சன் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை-டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு, வாக்குவாதம் போன்றவை இருக்கும், ஆனால் நடைபெற்று முடிந்த போட்டிகளில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 3-வது ஓவரில் ராயுடு அவுட்டானார். அந்த ஓவரில் இஷாந்த் சர்மாவும், வாட்சனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நடுவர் இடையில் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers