கெயில் சூறாவளி: சர்ச்சையுடன் வெற்றி பெற்ற அஷ்வினின் பஞ்சாப்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்பூரில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் ராகுல் (4) பட்லரின் சூப்பரான கேட்ச்சால் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த மாயங்க் அகர்வால் (22) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்து வந்த சர்ப்ராஜ் நல்ல ஆதரவு கொடுக்க, மறுமுனையில் அதிரடி காட்டினார்.

இந்நிலையில் உனத்கத் வீசிய போட்டியின் 12வது ஓவரில், கெயில் ஹாட்ரிக் பவுண்டரி மற்றும் ஒரு இமாலய சிக்சர் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். தொடர்ந்து ஆர்சர் பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அடிரடி காட்டினார்.

ஒருபுறம் கெயில் சூறாவளி வேகத்தில் ஓட்டங்கள் சேர்க்க, மறுபுறம் மாயங்க் அவ்வப்போது பவுண்டரிகள் விளாச, பஞ்சாப் அணியின் ரன் வேகம் சூடுபிடித்தது.

தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் வீசிய போட்டியின் 16 ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்து 47 பந்தில் 79 ஓட்டங்கள் எடுத்து திருப்பதியின் அசத்தலான கேட்ச்சில் வெளியேறினார்.

கடைசி நேரத்தில் சர்ப்ராஜ் ஓரளவு கைகொடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, ரகானே (27) நிலைக்கவில்லை. பட்லர் (69) அஷ்வினின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்டால் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த சாம்சன் (30), ஸ்மித் (19) பென் ஸ்டோக்ஸ் (6) என அடுத்ததடுத்து வெளியேறினர்.

கடைசி வரிசை வீரர்களான கவுதம் (3), ஆர்சர் (2), உனக்தத் (1) என யாரும் தாக்குபிடிக்கவில்லை. முதலில் வெல்லும் நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்