பும்ராவின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரிஷப்பாண்ட்! ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில் இளம் வீரர் ரிஷப் பாண்ட ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்தா ஆண்டு நேற்று முன் தினம் துவங்கியது.

இதில் முதல் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், நேற்று மும்பை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அபாரா வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரரான ரிசப் பாண்ட் 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில் இந்த போட்டியி ரிஷப் பாண்ட் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த சிக்ஸர் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பும்ரா வீசிய 17.2 ஓவரில் ரிஷப் பாண்ட அசால்ட்டாக சிக்ஸர் அடித்து பறக்கவிடுகிறார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அப்படியே டோனி ஷாட் போன்றே இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்