திரும்பி அடிப்போம்.... ஐபிஎல் ஆட்டத்தில் 7 முறை முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றதன் மூலம் 7 வருடங்களாக முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை கொல்கத்தா தக்கவத்துள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் தொடந்து 6 முறை முதல் போட்டியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நேற்றைய ஆட்டத்தில் வழக்கம்போல சொல்கத்தா அணி முதல் வெற்றியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்த்து அந்த அணியின் ரசிகர்களிடையே எழுந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அசத்தினார்.

அடுத்து வந்த தமிழக வீரரான விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 20 ஓவரின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் நிதிஷ் ரனா 47 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த அனியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் வெளியேற, ஆண்ட்ரே ரசூல் மற்றும் சுப்மன் ஹில் கூட்டணி அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்தது.

இதில் ரசூல் 19 பந்துகளில் 49 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7 வருடங்களாக முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை கொல்கத்தா தக்கவத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்