இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமனம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன்களாக பாப் டூ பிளிசிஸ், டுமினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் போட்டிக்கு பாப் டூ பிளிசில் கேப்னாக செயல்படுவார் என்றும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு ஜே.பி.டுமினி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று கேப்டவுனில் நடக்கிறது.

இரண்டாவது போட்டி 22ஆம் திகதியும், 3வது போட்டி மற்றும் கடைசி போட்டி 24ஆம் திகதியும் நடக்கிறது.

முன்னதாக, டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்