2003 உலகக்கோப்பையில் அடிபட்டதால் கங்குலி இப்படி சொல்கிறாரா? புஜாராவை எடுக்க சொல்வதன் காரணம் இது தான்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, தான் செய்த தவறை கோஹ்லியும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே, புஜாராவை அணியில் எடுக்க சொல்வதாக கூறப்படுகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று வித தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர் இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகிவிட்டதா? வலுவான அணியாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கும் வீரர் தான் அணியை சரிவிலிருந்து மீட்பவர், அதன் படி பார்த்தால் ராயுடு சிறப்பான ஆட்டத்தை கொடுத்த நிலையில், நடந்து முடிந்த அவுஸ்திரேலியா தொடரில் மூன்று போட்டிகளில் வெறும் 33 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், அடுத்த இரண்டு போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.

அதிலும் எந்த ஒர் முன்னேற்றமும் இல்லாத போது, கங்குலி இந்திய அணியின் டெஸ்ட் வீரரான புஜாராவை உலகக்கோப்பை அணிக்கு நான்காவது களமிறங்கும் வீரராக நான் தேர்வு செய்வேன் என்று கூறியிருந்தார்.

இது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், அவர் சொல்வதை உற்று கவனித்தால், உண்மை தெரிகிறது.

ஏனெனில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி டெஸ்ட் வீரரான லட்சுமண்னை அணியில் எடுக்காமல் விட்டது. ஆனால் அவர் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவரை அணியில் எடுக்காமல் இந்திய அணி மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக கூறப்பட்டது.

அதே போன்று தான் கங்குலி அன்று செய்த தவறை கோஹ்லியும் இன்று செய்துவிடக்கூடாது என்பதற்காகவே கங்குலி இப்படி கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்