சிஎஸ்கே-யின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா? வியப்பில் ஆழ்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு பேர் கூடியுள்ளார்களா? என வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

12வது ஐ.பி.எல் டி20 தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் சூழ்ந்தனர். டோனி களமிறங்கும்போது கூடியிருந்த ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவைக் குறிப்பிட்டு பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா? என்று வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்