ஐபிஎல்-யின்போது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்: வீரர்களுக்கு அறிவுரை கூறும் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டியின் போது, இந்திய வீரர்கள் உடற் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என விராட் கோஹ்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் 30ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடுவது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் காயம் ஏற்பட்டால் உலகக் கோப்பையில் வீரர்கள் விளையாட இயலாது என்றும் கருத்து நிலவுகிறது.

Reuters

இந்நிலையில், ஐ.பி.எல் போட்டியின் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘ஐ.பி.எல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது குறித்து அணி உரிமையாளர்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினாலும், உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தங்களது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீரரும் அவர்களது உடல் நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளில் விளையாட வேண்டும். ஏனென்றால் என்னுடைய உடல் தகுதிக்கு நான் 10 முதல் 12 போட்டிகளில் விளையாட முடியும்.

மற்றவர்கள் தங்களது உடல் நிலைக்கு ஏற்ப ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மேலும் ஐ.பி.எல்-யில் வீரர்கள் நன்றாக விளையாடினால் அந்த மனபலத்தை உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல முடியும்’ என தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் ஐ.பி.எல்-யில் ஆடுவது குறித்து கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்