இலங்கை தொடரில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் மகன்: ஆனாலும் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் டி 20 லீக் தொடருக்கான ஏலத்தில் இடம்பெறுகிறார் என தெரியவந்துள்ளது.

மும்பை டி20 லீக் ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயரும் இடம்பிடித்துள்ளது.

அர்ஜூன் டெண்டுல்கர் டிஆர்ஏ பாட்டீல் டி20 தொடரில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் மும்பை அணியின் அண்டர் 23ல் இடம்பெற்றார். மும்பை அணிக்கான அண்டர் 14, அண்டர் 16 மற்றும் அண்டர்19 ஆகிய அணிகளில் அவர் விளையாடினார்.

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் அண்டர் 19 அணிக்கு ஆல் ரவுண்டராக அர்ஜுனையும் தேர்வு செய்தனர்.

எனினும், அவர் அந்த தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை

மொத்தமாகவே 3 விக்கெட்டுகள் மட்டும் எடுத்த அர்ஜூன், அடித்த ரன்கள் 32 மட்டுமே. இந்நிலையில் தான் மும்பை டி 20 லீக்கில் தமது முத்திரையை அழுத்தமாக பதிக்க காத்துள்ளார் அர்ஜூன்.

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் மும்பை டி20 தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்