டோனி எண்ட்ரி ஆனவுடன் அதிர்ந்த சென்னை அரங்கம்! காலில் விழ வந்த ரசிகனை ஓட வைத்த சுவாரசிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் டோனி ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளே இருந்த ரசிகர் ஒருவர் அவர் காலில் விழுவதற்கு ஓடி வந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்ந்த இந்த ஆண்டு துவங்கவுள்ளது.

இதற்காக அனைத்து அணி வீரர்களும் இப்போதிலிருந்தே பயிற்சியை துவங்கிவிட்டனர். அதன் படி சென்னை அணி வீரர்களும் தங்கள் பயிற்சியை துவங்கியுள்ளனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக டோனி மைதானத்திற்குள் இறங்கியவுடன், மைதானமே அலறியது, அந்தளவிற்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.

ஒரு போட்டியை பார்ப்பதற்கு எந்தளவிற்கு கூட்டம் வருமோ அந்தளவிற்கு இருந்தது.

இந்நிலையில் டோனி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்போது திடீரென்று மைதானத்தின் உள்ளே நுழைந்த ரசிகன் டோனியின் காலில் விழு ஓடி வந்தான்.

அப்போது இதைக் கண்ட டோனி, அவரிடமிருந்து தப்பிப்பது போன்று விளையாட்டாக ஓடினார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்