அணிக்கு திரும்பும் ஸ்மித், வார்னர்! முதலில் கலந்து கொள்ளும் மீட்டிங்

Report Print Abisha in கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரது தடையும் இன்னும் 15 நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் யூஏஇயில் நடக்கும் அணி மீட்டிங்கில் பங்கேற்கிறார்கள்.

வார்னர், ஸ்மித் இருவரும் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார்கள். அதன் பின் மே 30 ஆம் திகதி நடைபெறஉள்ள யூஏஇயில் அணி மீட்டிங்கில் பங்கேற்கிறார்கள். உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா ஆடும் கடைசி தொடர் இதுதான்.

தற்போது, ஆஸ்திரேலியா இந்தியாவில் பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது.

இதில், ஸ்மித் மற்றும் வார்னர் சென்ற ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டனர். அந்த தடை வரும் மார்ச் 29ம் தேதியோடு நிறைவு பெறுகிறது இதனால் இருவரும் அணிக்கு திரும்ப உள்ளனர்.

மேலும், ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி யூஏஇயில் துவங்குகிறது. தடை நீங்கி கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் உடற் தகுதியில்சரிவராததால் இடம்பெறவில்லை.

ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு ஆடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers