டோனி, சச்சின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோகித் சர்மா? இதோ அருமையான வாய்ப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்ட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஐந்தாவது போட்டி சற்றுமுன்னர் தொடங்கியது.

இப்போட்டியில் இந்திய விரர் ரோகித் சர்மா புதிய சாதனை பட்டியலில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் அரங்கில் 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

ரோகித் சர்மா இம்மைல்கல்லை எட்டும்பட்சத்தில், டோனி (214 இன்னிங்ஸ்), சச்சின் (210 இன்னிங்ஸ்), டிராவிட் (228 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனையை தகர்ப்பார்.

இதுவரை 199 இன்னிங்சில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா 7954 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 8000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி (175 இன்னிங்ஸ்), முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்