இதுவரை யாரும் இப்படி அவுட் செய்யவில்லை? அவுஸ்திரேலியா போட்டியில் வித்தியாசமாக ரன் அவுட் செய்த டோனி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி வித்தியாசமான முறையில் ரன் அவுட் செய்து அசத்தியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ததால், 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ஓட்டம் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் டோனி வழக்கம் போல் ஒரு அற்புதமான ரன் அவுட் செய்துள்ளார். ஆனால் இந்த முறை எந்த ஒரு விக்கெட் கீப்பரும் இது போன்று ரன் அவுட் செய்ததை பார்த்தில்லை என்று கூறலாம்.

ஆட்டத்தின் 42-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீச, அதை எதிர்கொண்ட மார்ஷ் ஆப் திசையில் அடித்து ஆட, அப்போது வேகமாக சென்ற பந்தை ஜடேஜா அற்புதமாக பீல்டிங் செய்து, மின்னல் வேக த்ரோ அடிக்க, அதை டோனி அற்புதமாக தன் கையால் தட்டி ரன் அவுட் செய்தார்.

இதைக் கண்ட வர்ணனையாளர் ஒரு விக்கெட் கீப்பர் இது போன்று ரன் அவுட் செய்வது முதல் முறை என்று நினைக்கிறேன் என்று டோனியை புகழந்து தள்ளினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்