நேரடியாக உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கும் ஸ்மித்-வார்னர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னருக்கு இடம் கிடைக்காததால், உலகக் கிண்ணத் தொடரில் இருவரும் நேரடியாக விளையாட உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித், வார்னர் மற்றும் இளம் வீரர் பான்கிராப்ட் ஆகியோர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பான்கிராப்டுக்கு 9 மாதங்களும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓர் ஆண்டும் விளையாட தடை விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு ஏற்கனவே தடை முடிந்த நிலையில், ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்காலம் வரும் 28ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஸ்மித், வார்னர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இதனால், இவர்கள் இருவரும் உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும், கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers