டோனி பேச்சை கேட்காத கோஹ்லி! வீணான டிஆர்எஸ் ரிவ்யூ

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டோனியிடம் ஆலோசிக்காமல் கோஹ்லி மற்றும் பும்ரா இருவரும் டி.ஆர்.எஸ் ரிவ்யூவை இரண்டாவது ஓவரிலேயே வீணடித்தனர்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் செய்து வருகிறது.

போட்டியின் 2வது ஓவரில் பும்ரா வீசிய பந்து, எதிரணி வீரர் ஆரோன் பின்ச்சின் காலில் பட்டது. உடனடியாக பும்ரா அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததால், கேப்டன் கோஹ்லியுடன் ரிவ்யூ கேட்க பும்ரா ஆலோசித்தார்.

பரபரப்பான சூழலில் டோனி அவுட் கேட்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தார். ஆனால், கோஹ்லி-பும்ரா இருவரும் ரிவ்யூ கேட்கும் முடிவில் இருந்ததால் டி.ஆர்.எஸ் ரிவ்யூ கேட்கப்பட்டது.

அதில் பந்து பேட்டில் படவில்லை என்று உறுதியானது. ஆனால், ஹாக்-ஐ ரீப்ளேவில் பந்து ஸ்டம்ப்களுக்கு மேலே உயரமாக செல்வது தெரிந்தது. இதனால் இந்திய அணி தரப்பில் ஒரு டி.ஆர்.எஸ் வீணானது.

இதற்கு முன்பும் கோஹ்லி இதே போல் டி.ஆர்.எஸ்-ஐ வீணாக்கியுள்ளார். ஆனால், டோனியின் கணிப்பு எப்போதும் மிகச் சரியாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers