இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டிய பாப் டூ பிளீசிஸ்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது போட்டியில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கைக்கு நிர்ணயித்தது.

அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 138 ஓட்டங்களுக்கு சுருண்டு 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் 66 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 5 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய 10வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 131 போட்டிகளில் விளையாடியிருக்கும் டூ பிளீசிஸ் 5017 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 11 சதம், 32 அரைசதங்கள் அடங்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்