உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஓய்வா?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஐபிஎல்லில் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

வருகிற 23ம் திகதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5ம் திகதி வரை நடக்கிறது, அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் போட்டி அட்டவணை அறிவிக்கப்படும்.

இந்நிலையில் மே மாதம் 30 திகதி தொடங்கும் உலக கிண்ண போட்டிகள் யூலை 14ம் திகதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

அதாவது ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த இரண்டு வாரத்தில் உலக கிண்ண போட்டிகள் தொடங்குவதால் பல கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் லில் பங்கேற்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐயின் தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐபிஎல்லில் ஓய்வு அளிப்பது தொடர்பில் தேர்வு குழு முடிவெடுக்கும்.

அத்துடன் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கருத்துகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...