எப்போது ஓய்வு? முடிவை அறிவித்தார் பிரபல வீரர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்.

39 வயதாகும் இம்ரான் தாஹிர் 2011ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் என்றாலும், வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தென் ஆப்பிரிக்காவில் தஞ்சம் புகுந்து கிரிக்கெட் வீரராக ஜொலித்தார்.

இதுவரையிலும் 95 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 156 விக்கெட்டுகளும், 20 டெஸ்ட் போட்டிகளில் 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் தாஹிர், உலக கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும், அதே நிலை தான் எனக்கும்.

தென் ஆப்பிரிக்கா போன்ற சிறந்த அணிக்காக விளையாடுவதே பெரிய சாதனை தான், அதன்பின்னர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருக்கிறேன்.

எனினும் லீக் போட்டிகளில் விளையாட கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது, 2020ம் ஆண்டு வரை டி20 போட்டிகளில் விளையாடுவேன்.

இப்போது நான் எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்