உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும்! வெயின் பிராவோ நம்பிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் அணியாக இருக்கும் என்று வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.

மே 30ஆம் திகதி தொடங்கும் உலகக் கோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.

இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விஸ்வரூபமெடுத்த கிறிஸ் கெய்லினால் மைதானத்தில் சிக்சர்களாக பறந்தன. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பாஃர்முக்கு வந்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தனது அணி குறித்து கூறுகையில், ‘எங்களது அணியில் சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்திறனில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். நம்பர் ஒன் அணியான இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது.

நாங்கள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், மற்ற வீரர்களிடமும் பேசினேன். இந்த அணி உலகக் கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால், அனுபவம் மற்றும் இளைஞர்களின் காம்பினேசன் சிறப்பாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்