கவுதம் காம்பீரின் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் அஸ்வின்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக முன்னாள் வீரர் கவுதம் காம்பீரின் கனவு இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளையும், வீரர்களையும் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான கவுதம் காம்பீர் உலகக் கிண்ணத்துக்கான தனது கனவு இந்திய அணியை அறிவித்துள்ளார். தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். அதன் பின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஸ்வின், டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம்பெற்று வந்தார். ஆனால், அவுஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் தனது கனவு அணியில் அஸ்வினை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் காம்பீர். மேலும், ‘இந்திய அணியில் அனுபவம் மிக்க சுழற்பந்துவீச்சாளர் தேவை. இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் அனுபவம் கொண்ட வீரர் தேவை என்பதால், அஸ்வின் தேவை’ என குறிப்பிட்டுள்ளார்.

AFP
கவுதம் காம்பீர் தேர்வு செய்த 16 பேர் கொண்ட அணி விபரம்

ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி, அம்பத்தி ராயுடு, டோனி, கேதார் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்