இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி - தோனியின் மற்றும்மொரு சாதனை

Report Print Abisha in கிரிக்கெட்

நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் அரை சதம் விளாசியதுடன் தனக்கே உரிய பவுண்டரி மூலம் இந்தியாவை வெற்றிபெற செய்துள்ளார் தோனி.

அதில், 72 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்த மகேந்திர சிங் தோனி, 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்தியா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இதுவரை இந்தியா அணிக்காக மொத்தம் 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி. மேலும், ஆசிய லெவன் அணிக்காக 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி.

இந்தியாவிற்காக 216 சிக்ஸர்கள் உடன் தோனி முதலிடத்திலும், 215 சிக்ஸர்கள் உடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மூலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் அரைச்சதம் அடித்துள்ளார் தோனி.

237ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியா அணி,99/4 என இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது தோனியின் 59மற்றும் கேதர் ஜாதவின் 81ஓட்டங்கள் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்