டெஸ்டில் சாதித்து விட்டு ஒரு நாள் போட்டியில் சொதப்பிய இலங்கை! அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வரலாறு சாதனை படைத்தது.

இதையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிக்வெல்லா (8 ரன்), உபுல் தரங்கா (9 ரன்) இருவரும் நிகிடியின் வேகத்தில் வீழ்ந்தனர். மிடில் வரிசையில் ஒஷாடே பெர்னாண்டோ (49 ரன்), குசல் மென்டிஸ் (60 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (39 ரன்) குறிப்பிடும்படி ஆடினர்.

இலங்கை அணி 47 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் நிகிடி, இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தனது 11-வது சதத்தை அடித்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 112 ரன்களும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 81 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்