டோனிக்கு ஓய்வு கொடுத்து தமிழக வீரர் விஜய் ஷங்கரை விளையாட வைக்கலாம்: முன்னாள் இந்திய வீரர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டோனிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தமிழக வீரர் விஜய் ஷங்கரை களம் இறக்கலாம் என முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை உலகக் கிண்ண போட்டிக்கான பரிசோதனையாக இந்திய அணி மாற்றிக் கொண்டுள்ளது.

அதன்படி, முதல் டி20 போட்டியில் மயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ், ராகுல் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

விஜய் ஷங்கர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல் போட்டியில் டோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் விளையாடினர். எனவே யாரை இன்றைய போட்டியில் களமிறக்கலாம் என்ற கேள்வி நிலவுகிறது.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி இந்தப் போட்டி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

‘டோனி உலகக் கிண்ண தொடரில் நிச்சயம் முதல் விக்கெட் கீப்பராக ஆடப் போகிறார் என்னும் பட்சத்தில், அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

டோனிக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விஜய் ஷங்கரை அணியில் சேர்த்து, உலகக் கிண்ண தொடருக்கு முன் அதிக போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers