கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா! சிக்சரில் அரைசதம் அடிக்கப்போகும் டோனி-கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ரோஹித் ஷர்மா காத்திருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல்(103) முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் கப்தில்(103) 2வது இடத்திலும் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா(102) உள்ளார். இந்நிலையில், இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா 2 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில், கெய்லை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிப்பார். கெய்ல் 52 இன்னிங்சில் 103 சிக்சர்களும், கப்தில் 74 இன்னிங்சில் 103 சிக்சர்களும் அடித்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 86 இன்னிங்சில் 102 சிக்சர்களும் விளாசியுள்ளனர்.

இதேபோல் இந்திய அளவில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் டோனி(49), கோஹ்லி(48) இருவரும் உள்ளனர்.

இன்றைய போட்டியில் டோனி ஒரு சிக்சரும், கோஹ்லி 2 சிக்சர்களும் அடித்தால் டி20 போட்டிகளில் 50 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்கள். எனவே இன்று நடக்கும் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers