உலகக்கோப்பை கனவு அவ்வளவு தானா? தமிழக வீரரை இந்திய அணியிலிருந்து மறைமுகமாக தூக்க சொல்லும் முன்னாள் வீரர்!

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியில் மூன்று விக்கெட் கீப்பருடன் இந்திய அணி களமிறங்காமால் ஒரு விக்கெட் கீப்பரை நீக்கிவிடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியின் அருகில் சென்று தோற்றது.

இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் இந்திய அணி குறித்து கூறுகையில்,

கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

அதேநேரத்தில் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி ஆடுவதால், களத்தில் 2 விக்கெட் கீப்பர்கள் பீல்டிங் செய்ய நேர்கிறது.

அவர்களால் நேர்த்தியாக பீல்டிங் செய்ய முடியாது. இது அவுஸ்திரேலியா அணிக்கு சாதகமாக முடியும், அவர்கள் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பதற்கும் வாய்ப்பு அமையும்.

எனவே ஒரு விக்கெட் கீப்பரை நீக்கிவிட்டு துவக்க வீரர் தவானை அணியில் சேர்க்கலாம். ரோஹித்தும் தவானும் வழக்கம்போல் துவக்க வீரர்களாக களமிறங்கி, ராகுலை 4-ஆம் வரிசையில் இறக்கினால் சரியாக இருக்கும்.

அதேபோல உமேஷ் யாதவையும் அணியிலிருந்து நீக்கிவிடலாம், தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இவர் அப்படி கூறியுள்ளதால், அவர் நீக்க பரிந்துரைக்கும் வீரர் தினெஷ் கார்த்திக் தான் என்பது தெரிகிறது.

தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு தவானை அணியில் சேர்த்து, ராகுலை 4-ஆம் வரிசையில் இறக்கலாம் என்பது அவரின் கருத்தாக இருக்குமோ என்று எண்ணப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers