9 ரன்களில் ஆல் அவுட் ஆன கிரிக்கெட் அணி! எத்தனை வீரர்கள் டக் அவுட் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

உள்ளூர் அணி ஒன்று வெறும் 9 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில் அந்த அணியின் 9 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

புதுச்சேரியில் நடந்த மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச பெண்கள் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மிசோரம் அணி வீரர்கள் வெறும் 6 ரன்களை மட்டும் எடுத்தனர்.

முதலில் பேட்டிங் செய்த மிசோரம் 13.5 ஓவர்கள் விளையாடி வெறும் 9 ரன்கள் மட்டும் தான் எடுத்தது.

அதுவும் மிசோரம் அணியின் 5வதாக களமிறங்கிய அபூர்வா பரத்வாஜ் 6 ரன்கள் எடுத்தார். மற்ற 9 பேட்ஸ் உமன்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

25 பந்துகளை எதிர்கொண்ட அபூர்வா பரத்வாஜ் 6 ரன்களை எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி அடங்கும். மற்ற 3 ரன்கள் மத்திய பிரதேச அணி பவுலர்களால் உதிரி ரன்களாக கிடைத்தது.

10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மத்திய பிரதேச அணி ஒரு ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers